ஊட்டச்சத்து குறைபாட்டில் நைஜீரியாவுடன் சேர்க்கப்பட்ட இந்தியா..!! நாட்டிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 14, 2020, 1:34 PM IST
Highlights

மக்களிடையே ஊட்டச்சத்து சமத்துவமின்மை வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் உலகில் மிகவும் மோசமாக உள்ள நைஜீரியா இந்தோனேஷியா ஆசிய நாடுகளுடன் இப்போது இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது . 

ஊட்டச்சத்து குறைபாட்டால் மிகவும் ஏழ்மை மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நாடு என அடையாளம் காணப்பட்டுள்ள நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உடன் இந்தியாவும் தற்போது  இணைந்துள்ளதா தகவல் வெளியாகி உள்ளன .  உலகில் உள்ள 88 நாடுகள்  2022க்குள் தங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஊட்டச்சத்துள்ள உணவை அளிப்பதாக கூறி இருந்தனர் இந்தக் குறியீட்டை இந்தியாவால் நிறைவேற்ற முடியாமல் போகலாம் என்று கடந்த  செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ள உலக ஊட்டச்சத்து அறிக்கை  தெரிவித்துள்ளது .  மேலும் அந்த அறிக்கையில் ஊட்டச்சத்தின் குடும்ப சமத்துவமின்மை அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2012 இல் உலக சுகாதார மன்றம் 2025 வாக்கில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு ஆறு வகையான ஊட்டச்சத்துக்களை அடையாளம் காட்டியது .  மேலும் அது எடை குறைவாக இருக்கும் குழந்தைகள் ரத்தசோகையுடன் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தாய்மார்கள் , குழந்தை பிறந்த முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் முதலான வற்றை வலியுறுத்தி இருந்தது. 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள 2020ஆம் ஆண்டு உலக ஊட்டச்சத்து அறிக்கையின்படி 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எடை ,  பெண்களின் ரத்தச்சோகை குழந்தைகளின் அதீத எடை மற்றும் தாய்ப்பால் இன்மை முதலான ஊட்டச்சத்துகான நான்கு அம்சங்களையுமே  வரும் 2025 இல் இந்தியாவால்  நிறைவேற்ற இயலாமல் போகலாம் என்று கூறியிருக்கிறது .  இரண்டாயிரத்துக்கும் 2016 க்கும் இடையே குறைந்த எடையுள்ள குழந்தைகளின் விகிதம் ஆண் குழந்தைகளுக்கு 66 .0 சதவீதத்திலிருந்து 58.1 சதவீதமாகவும் ,  பெண் குழந்தைகளுக்கு 54 . 2 சதவீதத்தில் இருந்து 50 . 1 சதவீதமாகவும் குறைந்து இருக்கிறது .  எனினும் ஆசியாவில் சராசரியான ஆண் குழந்தைகள் 35.6 சதவீதம் பெண் குழந்தைகள் 31.8 சதவீதம் என்பதுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமாகும் மேலும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 37.9 சதவீதத்தினர் வளர்ச்சி குன்றி காணப்படுகின்றனர் என்றும் 20.8 சதவீதத்தினர் நலிவடைந்து காணப்படுகின்றனர் என்றும் இது ஆசியாவின் சராசரியான முறையே 22.7 சதவீதத்துடன் 9.4 சதவீதத்துடன் ஒப்பிட்டால் எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புலப்படும்  என்று கூறியிருக்கிறது . 

அதேபோன்று கருத்தரிக்கும் நிலையில் உள்ள தாய்மார்களில் இருவரில் ஒருவருக்கு ரத்த சோகை காணப்படுவதாகவும் அதேபோன்று அதிக எடை மற்றும் உடல் பருமன் உடைய பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது என்றும் இது வயது அடைந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினரை பாதிக்கிறது என்றும் பெண்களில் 21.6 சதவீதமாகவும் ஆண்களில் 17.8 சதவீதமாகவும் இவர்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது  .  மக்களிடையே ஊட்டச்சத்து சமத்துவமின்மை வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் உலகில் மிகவும் மோசமாக உள்ள நைஜீரியா இந்தோனேஷியா ஆசிய நாடுகளுடன் இப்போது இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது .  இந்தியாவில் தேவையான வளர்ச்சி இன்றி இருக்கும் மக்கள் உத்தரப்பிரதேசத்தில் 40 சதவீதத்தினர் இருக்கிறார்கள் மேலும் போதிய வளர்ச்சி இன்றி இருப்பவர்கள் நகரத்தில் இருப்பவர்களை விட கிராமப்புறங்களில் 10.1 சதவீதம் அதிகமாக இருக்கிறார்கள் . கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் போராடிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மை போக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை திட்டவட்டமாக வலியுறுத்தி இருக்கிறது .
 

click me!