தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் தவறிவிட்டது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

 
Published : Feb 24, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் தவறிவிட்டது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுருக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை . சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் தவறிவிட்டது என எதிர்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை விவகாரம் குறித்து குடியரசுத்தலைவரிடம் முறையிட நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரணாப்முகர்ஜியிடம் சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதராவ செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதையடுத்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழக அரசியல் நிலவரம் குறித்து சோனியாகாந்தியிடம் ஆலோசித்தோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை . சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல் நிலையம் தவறிவிட்டது.

பேரவையில் நடந்த விதிமீறல்கள் குறித்து குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளோம். பிரணாப் முகர்ஜி எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பார் என நம்புகிறோம்.அதுகுறித்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பபட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு