தமிழ்நாட்டுல 70 லட்சம் கோடிக்கு ஊழல் நடத்திருக்கு … நீண்ட பட்டியலை கொடுத்து ஓபன் டாக் விட்ட ராமதாஸ்…

Published : Sep 10, 2018, 08:31 PM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
தமிழ்நாட்டுல 70 லட்சம்  கோடிக்கு ஊழல் நடத்திருக்கு … நீண்ட பட்டியலை கொடுத்து ஓபன் டாக் விட்ட ராமதாஸ்…

சுருக்கம்

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி ஊழல், சத்துணவு ஊழல் என் அனைத்துத் துறைகளிலும் 70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதனை பொதுக் கூட்டத்தில் பட்டியலிட்டார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குட்கா ஊழல் தொடர்பாக டிஜிபி வீடு, முன்னாள் சென்னை கமிஷனர் வீடு. அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு போன்றவற்றில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குட்கா விற்பனை செய்ததில் 50 ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று 20 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குற்றம்சாட்டியுள்ள வருமான வரித்துறை, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இப்படி எங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தமிழக அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது  கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ஆளுநரிடம்  18 எம்.எல்.ஏக்கள் குறித்து புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவை, ஒவ்வொரு வரியாகப் படித்து சந்தேகம் ஏதாவது இருந்தால் தங்களிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.  ஆனால் 9 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லைஎன குற்றம்சாட்டினார்.

 

இதுவரை தமிழ்நாட்டில் 70 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

12 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒப்பந்தங்கள் ஊழல், பல்கலைக்கழக ஊழல், போக்குவரத்து சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் என பட்டியலிட்ட அவர்,  இந்த ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு ஊழல் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.

 ஜனவரி மாத தொடக்கத்தில், பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிவிடும் என்று கூறியிருந்தேன். எச்சரிக்கை செய்ததை நோக்கி தற்போது பெட்ரோல் விலை சென்றுகொண்டிருக்கிறது எந ராமதாஸ் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளின் வரி என்ற போர்வையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!