தகாத உறவு விவகாரம்… ஏன் வழக்குத் தொடர்ந்தேன் தெரியுமா ? ஜோசப் ஷைன் விளக்கம் …

By Selvanayagam PFirst Published Sep 28, 2018, 8:19 PM IST
Highlights

தன்னுடன் பணியாற்றிய  பெண் கொடுத்த போலியான பாலியல் பலாத்கார வழக்கு காரணமாக, என்னுடைய நண்பர் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து ஆண்களைக் காப்பாற்றவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக ஜோசப் ஷைன் தெரிவித்தார்.

திருமணமான ஒரு ஆண், திருமணமான இன்னொரு பெண்ணுடன், அவரது கணவரின் சம்மதம் இன்றியோ அல்லது ஒத்துழைப்புடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொள்கிறபோது, அது பாலியல் பலாத்காரம் அல்ல என்றாலும் அந்தப் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட ஆணுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 158 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497 வகை செய்துள்ளது.

இந்தப் பிரிவின்படி, தகாத உறவில் ஈடுபடுகிற ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க முடியும். ஆனால் உடந்தையாக இருக்கிற பெண்ணுக்கு தண்டனை கிடையாது.

2 பேருமே ஒரு குற்றத்தை சேர்ந்து செய்கிறபோது, ஆணுக்கு தண்டனை வழங்கி விட்டு, பெண்ணை தண்டிக்காமல் விட்டுவிடுவதை எதிர்த்து இத்தாலி நாட்டில் வசிக்கும் இந்தியர் ஜோசப் ஷைன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமனற் நீதிபதிகள், தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல...தகாத உறவால், விவாகரத்து கோரலாம்… தகாத உறவில் ஈடுபடும் ஆணை மட்டும் தண்டித்த சட்டப்பிரிவு ரத்து…. பெண் சமத்துவம் இல்லாத எந்த சட்டமும், அரசியல் சட்டத்துக்கு எதிரானது…. அரசியல் சாசனத்தின் அடிப்படையே நானும், நீயும் என்னும் சமத்துவம்தான்.

 கணவர் என்பவர் மனைவியின் எஜமான் அல்ல…. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறியது என்று தீர்ப்பளித்தனர். மேலும் உச்சநீதிமன்றம் ஆண்களுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்தது.

இந்நிலையில் இந்த பழக்கைத் தொடர்ந்த ஜோசப் ஷைன், தேற்காக இப்படி ஒரு வழக்கை தொடர்ந்தார்  எனபது குறித்து  லைவ்மிண்ட் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தன்னுடன் பணியாற்றிய  பெண் ஒருவர் கொடுத்த போலியான பாலியல் பலாத்கார வழக்கு காரணமாக, என்னுடைய நண்பர் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து ஆண்களைக் காப்பாற்றவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்தார்.

பெண்கள் திருமணம் செய்துக்கொண்ட பின்   விருப்பத்துடன் உறவில் ஈடுபடலாம், ஆனால் ஆண்கள் மட்டுமே பாதிப்பை எதிர்க்கொள்வார்கள்  இது போன்றவை ஆண்களை மட்டும் தனிமைப்படுத்துகிறது. அவரால் இதனை சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என தெரிவித்த ஜோசப் ஷைன் ஒரு அடிப்படையான நடவடிக்கைதான் என்றும் , இதனால் மேலும் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

click me!