இந்துக்களை அவமதிக்கும் நடிகர் விஜய் படத்தை புறக்கணியுங்கள்.. கொதிக்கும் மதுரை ஆதினம்..

Published : Jun 06, 2022, 10:58 AM ISTUpdated : Jun 06, 2022, 11:00 AM IST
இந்துக்களை அவமதிக்கும் நடிகர் விஜய் படத்தை புறக்கணியுங்கள்.. கொதிக்கும் மதுரை ஆதினம்..

சுருக்கம்

மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்று கூறினார்.

மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்று கூறினார்.
கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என சொல்கிறார்கள். 

சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது? என்று கேள்வியெழுப்பினார். தமிழகத்தில் மதுப்பான கடைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறிய அவர் பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் `செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே’ என்று தான் பாடியிருப்பார். 

தமிழ்நாட்டில் பண்பாடு கலாச்சாரமே கோவிலுக்குள் தான் உள்ளது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார். நாங்கள் அரசியல் பேசாமல் வேறு யாரு பேசுவது?  முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை..? என்று கேள்விகளை ஏழுப்பினார்.இந்துசமய அறநிலையத்துறை கோவிலிம் உண்டியலில் காசு போடாதீர்கள். அந்த பணம் முழுவதும் கோவிலுக்கு செல்வதில்லை என்று தெரிவித்தார்.

அறநிலையத்துறை கலைத்துவிட்டு, கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும். ’திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன’ என சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை. `திராவிட பாரம்பரியம்’ என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள்.

திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும்.  கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டுள்ளனர். குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது. ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள் என்று பேசினார்.

மேலும் படிக்க: TN Govt : ஜோராக விற்கும் கஞ்சா.. திமுக அரசு என்ன செய்தது ? வெளுத்து வாங்கிய சீமான் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!
Amma Unavagam: அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!