இடைதேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ்தான் போட்டியிடும்.. இப்போதே துண்டு போட்ட அழகிரி..

By Ezhilarasan BabuFirst Published Apr 12, 2021, 10:40 AM IST
Highlights

மேலும் தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிந்த மறுதினமே விவசாயிகளையும், தமிழக மக்களையும் பழிவாங்கும் வகையில் உர விலை உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு செய்யும் துரோகம், 

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றால், அதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்தான் போட்டியிடுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மரணமடைந்த நிலையில் கே.எஸ் அழகிரி இவ்வாறு கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 

மே 2ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை  முடிவுக்காக ஓட்டுமொத்த தமிழகமும்  காத்திருக்கிறது. இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாது, தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை அவர் ஒரு தொகுதியில் வெற்றி பெறும் பட்சத்தில், மீண்டும் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் அது குறித்து தெரிவித்துள்ள, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வந்தால், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார் எனவும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிந்த மறுதினமே விவசாயிகளையும், தமிழக மக்களையும் பழிவாங்கும் வகையில் உர விலை உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு செய்யும் துரோகம், இதற்கு மாறாக விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ள கூறியிருக்கலாம். மொத்தத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது அந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!