இந்து மதத்திற்கு ஆதரவாக ரஜினி பேசினால் நான் அவரைத்தான் ஆதரிப்பேன்; சசிகலா இல்லாத அரசியல் தமிழகத்தில் இல்லை!!

By Thiraviaraj RMFirst Published Mar 6, 2020, 8:08 PM IST
Highlights

திடீர் திடீர்னு அனுகுண்டை வீசி இந்திய அரசியலை அவ்வப்போது அதிர்ச்சியடைய வைப்பவர் சுப்பிரமணியசாமி, சமீபகாலமாகவே சசிகலாவை விடுத்து தமிழகத்தில் அரசியல் செய்வது கஷ்டம் என்று பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

T.Balamurukan

திடீர் திடீர்னு அனுகுண்டை வீசி இந்திய அரசியலை அவ்வப்போது அதிர்ச்சியடைய வைப்பவர் சுப்பிரமணியசாமி, சமீபகாலமாகவே சசிகலாவை விடுத்து தமிழகத்தில் அரசியல் செய்வது கஷ்டம் என்று பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன்சுவாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும், சசிகலாவை விடுத்து இங்கு அரசியல் செய்வது கஷ்டம். ஜனநாயக நாட்டில் யாரும் போராட்டம் நடத்தலாம், ஆனால் தற்போதைய சி.ஏ.ஏ போராட்டங்கள் போல்யாருக்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது.

சிஏஏவினால் இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை, அது அமல்படுத்தப்பட்டு விட்டது. யாருக்கெல்லாம் நமது நாட்டில் குடியுரிமை கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் கொடுத்தாகி விட்டது.  இந்த சட்டம் மூலம்  யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை. இதன்மூலம் இஸ்லாமியர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும்  என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

நமது நாட்டின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பலநாடுகள் செயல்படுகின்றன. அதை நாம் யோசிக்க வேண்டும்.நம் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.  அதை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக தேர்தலில் தனியாக நின்று வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை.

தமிழகத்தில் பி.எப்.ஐ. பெரிதாக வளர்ந்துள்ளது, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக பாஜக இயக்குவது போன்று தெரியவில்லை.தமிழ்நாட்டில் சினிமா தான் பார்ப்பார்கள், சட்டம் படிக்க மாட்டார்கள்.துக்ள்க் விழாவில் பேசியது போல ரஜினி, ஹிந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசினால் அவருக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு கொடுப்பேன்.இந்திய,அமெரிக்கா நண்பர்களாக நெருங்கக்கூடாது , நாம் நெருங்கினால் சீனாவிற்கு ஆபத்து, நம்முடைய நெருங்கிய நண்பர் சீனா, அதை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்"என்றார்.

   

click me!