திருக்கோவிலூரில் பொன்முடி ஜெயித்தால் 6 மாதங்களில் இடைத்தேர்தல்... பீதி கிளப்பும் பாஜக..!

By Asianet TamilFirst Published Apr 3, 2021, 8:59 PM IST
Highlights

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால், 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் வருவது உறுதி என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் பொன்முடியும் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கலிவரதன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் வந்த பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராகவும், தாய்மையைப் போற்றும் பெண்களை இழிவாகவும் பேசிவருகிறார்கள்.


முதல்வர் பழனிச்சாமியின் தாயாரைப் பற்றியும் இழிவாக பேசியிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கதாகும். இந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்முடி மீது சொத்து குவிப்புக் வழக்கு, செம்மண் குவாரி வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகிவிடும். இதில், பொன்முடி நிச்சயம் தண்டனை அடைவார். அப்படி தண்டணை பெறும்பட்சத்தில் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் வருவது உறுதி. 
திமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகளுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வருமான வரித்துறை என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அவர்கள் பணியைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்களின் உறவினர்கள் பிற கட்சியினர் வீடுகளிலும்கூட சோதனை நடக்கிறது. இதில் திமுக ஒன்றும் விதி விலக்கல்ல அல்லவே” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

click me!