திமுக ஆட்சியை விமர்சித்தால் குண்டாஸ்..?ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TN_Goondas_Rule

Published : Dec 12, 2021, 03:59 PM ISTUpdated : Dec 12, 2021, 07:38 PM IST
திமுக ஆட்சியை விமர்சித்தால் குண்டாஸ்..?ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TN_Goondas_Rule

சுருக்கம்

பாஜகவினர், டிவிட்டரில் #TN_Goondas_Rule  என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

திமுக ஆட்சியை விமர்சித்து கருத்து கூறியதால் கிஷோர், கல்யாணராமன், மாரிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிஷோர், கல்யாணராமன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் இருக்கும் நிலையில், 3வதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க திமுக அரசு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, ‘’அரசுப் பேருந்தில் மகளிர்க்கு இலவசம் என அறிவித்தீர்கள். ஆனால், இன்னும் மகளிரை பேருந்துகளில் வைத்து அவமானப்படுத்தி இறக்கி விடும் கொடுமை நிகழ்கிறது. இதை தட்டிக்கேட்டால் கைது செய்வோம் என்கிறீர்கள்? இதுதான் உங்கள் கருத்துச் சுதந்திரமா?

தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை கூட நிலைநாட்ட முடியாத அவலம்? ஊரை ஏமாற்றி ஆட்சி செய்பவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் போலீஸை வைத்து வழக்கு போடும் கொடுமை. மக்களை அவ்வளவு சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். மழையால் தமிழகமே தத்தளித்தது. வெறும் விளம்பரத்துக்காக ஆய்வு நடத்தி விட்டு சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? இங்கேயும் விபூதி அடிக்கப் போகிறீர்களா?அரக்கர் கூட்டம், திராவிட கூட்டம் என்று பொய் பிரச்சாரம் செய்தால் உங்களுக்கு இனிக்கும்.

சொன்ன வாக்குறுதி என்னாச்சு? ஏனிந்த பாகுபாடு? ஏனிந்த பகல் கொள்ளை? என கேள்வி கேட்டால் கசக்கும். சமூக வலைதளங்களில் தன்னை புகழ வேண்டும். தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கேள்வி கேட்டால் உடனே காவல்துறையை ஏவி விடுவது? இதுதான் உம் விடியல் அரசின் நல்லாட்சியா? 

 

கருத்துச் சுதந்திரம் எங்கே? வாரிசு அரசியலே எங்கள் கட்சியில் கிடையாது என்றீர்கள். இப்போது மூத்த அமைச்சர்கள் கூட உங்கள் மகனுக்கு துதி பாடும் கொடுமை.

படுத்தே விட்டான் எனுமளவுக்கு டெல்லி வரை உங்க மானம் போச்சு, இதைப் பத்தி பேசுனா கைது நடவடிக்கை. ஆட்சிக்கு வந்த பின்னும் பி.ஜே.பி யை கண்டு பயப்படுவது ஏன்? நியாயமாக உண்மையாக ஆட்சி செய்கிறீர்கள் என்றால் ஏன் காவல்துறையை ஏவி விடுகிறீர்கள்? இன்னும் எத்தனை மக்களை பழிவாங்க போகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பும் பாஜகவினர், டிவிட்டரில் #TN_Goondas_Rule
 என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!