பாஜக எங்களை பழிவாங்க நினைத்தால் !! என் ஆட்சியை போனாலும் பரவாயில்லை!! சிஏஏ வை உள்ளே வரவிடமாட்டோம்;

Published : Feb 14, 2020, 07:21 AM IST
பாஜக எங்களை பழிவாங்க நினைத்தால் !! என் ஆட்சியை போனாலும் பரவாயில்லை!! சிஏஏ வை உள்ளே வரவிடமாட்டோம்;

சுருக்கம்

சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 147 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தேவைப்பட்டால் நானே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன், 

By: T.Balamurukan

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அங்கு, காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் நாராயணசாமி தலைமையில் அரசு இயங்கி வருகிறது. இந்த தீர்மானத்துக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நாராயணசாமி, “இந்தியா என்பது பல்வேறு இனக்குழுக்கள், மதத்தினர் வாழும் நாடு. இங்கு மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கும் எந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதை புதுச்சேரி மாநில மக்களும், நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். யார் அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம். மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்பட்டால் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம் சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 147 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தேவைப்பட்டால் நானே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன்." என்று அதிரடிகாட்டியிருக்கிறார் அவர். 

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார்.இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை கலைஞர்  பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, பாராட்டி, வாழ்த்துகிறேன். முதல்வர் நாராயணசாமியை பாராட்டியிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!