காங்கிரஸுக்காகவே எனக்குப் பிடித்த பாஜகவை எதிர்த்து பேசினேன்... ‘கை’யை முறித்து தாமரையை நீட்டும் குஷ்பு..!

Published : Oct 12, 2020, 06:42 PM IST
காங்கிரஸுக்காகவே எனக்குப் பிடித்த பாஜகவை எதிர்த்து பேசினேன்... ‘கை’யை முறித்து தாமரையை நீட்டும் குஷ்பு..!

சுருக்கம்

காங்கிரஸுக்காகவே எனக்குப் பிடித்த பாஜகவை எதிர்த்து பேசினேன் என நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார். 

 காங்கிரஸுக்காகவே எனக்குப் பிடித்த பாஜகவை எதிர்த்து பேசினேன் என நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நடிகை குஷ்பூ காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்த தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள குஷ்பூ உடனடியாக பாஜகவிலும் இணைந்துள்ளார். தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆரம்பம் முதலே பாஜகவின் திட்டங்கள் பல எனக்கு பிடித்திருந்தன. ஆனால் காங்கிரஸில் இருப்பதாலேயே அவற்றை எதிர்த்தேன்.

 

ரபேல் விவகாரத்தில் கூட ராகுல் காந்தி அதை எதிர்த்ததால் தான் நானும் எதிர்த்தேன். எல்லாருக்கும் ஒரு காலக்கட்டத்தில் மாற்றம் வரும். பாஜகவில் பல்வேறு திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக எனக்கு தோன்றிய நிலையில் அதில் இணைவதுதான் சரி என புரிந்து கொண்டேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிக்காக பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.

குஷ்பூவின் இந்த விளக்கம் காங்கிரஸினருக்கே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கட்சி மாறிய சில மணி நேரங்களிலேயே இப்படி கருத்துக்களை மாற்றி பேசுகிறார் என காங்கிரஸில் இருப்பவர்களே கலங்கிப்போயுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!