"மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும்"..! முதல் முறையாக மனம் திறந்த ராகுல்..!

By ezhil mozhiFirst Published Mar 13, 2019, 4:59 PM IST
Highlights

சென்னை தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார். 
 

சென்னை தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார். 

அப்போது பேசிய ராகுல், 

மோடியை கட்டித் தழுவியது ஏன்? என்ற கேள்விக்கு அன்பின் அடையாளமாகவே பிரதமர் மோடியை கட்டித்தழுவினேன் என்றும்,என் குடும்பத்தை பிரதமர் மோடி எப்போதும் திட்டுவார், ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என ராகுல் தெரிவித்து உள்ளார். 

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும் என்றும், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும், சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வியின் தரம் உயர வேண்டும் என்றும் நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், என்னுடைய கொள்கை என்பது எப்போதுமே பரந்து விரிந்த மனப்பான்மையை சார்ந்தது, இப்போதுள்ள பிரதமர் ஒரே கொள்கை மற்றும் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்திற்கு ஒரே கொள்கை ஒத்துவராது என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். பாலின சமத்துவத்தில் வட மாநிலத்தை விட தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை  நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். 

மேலும், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதற்கு இடையில் கேட்கப்பட்ட கேள்வியான மோடியை கட்டித் தழுவியது ஏன்? என்ற கேள்விக்கு அன்பின் அடையாளமாகவே பிரதமர் மோடியை கட்டித்தழுவினேன் என்றும்,என் குடும்பத்தை பிரதமர் மோடி எப்போதும் திட்டுவார், ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என ராகுல் தெரிவித்து உள்ளார்.

click me!