" இந்தியாவையும் மோடியின் ராஜதந்திரத்தையும் பாராட்டுகிறேன் " படுத்தேவிட்டார் பாக் பிரதமர் இம்ரான்கான்.

By Ezhilarasan BabuFirst Published Mar 21, 2022, 11:06 AM IST
Highlights

பிரதமர் மோடியை எப்போதும் கடுமையாக விமர்சிக்க கூடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல்முறையாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் மோடியின் ராஜதந்திரத்தையும் பாராட்டுகிறேன் என மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை எப்போதும் கடுமையாக விமர்சிக்க கூடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல்முறையாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் மோடியின் ராஜதந்திரத்தையும் பாராட்டுகிறேன் என மனம் திறந்து பேசியுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாகிஸ்தான் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். உக்ரைன் போரில் இந்தியா எடுத்த முடிவையும், அதே நேரத்தில் அமெரிக்க தலைமையிலான குவாட் கூட்டணியில் சுமூகமான உறவை பேணிவருவதையும் மேற்கோள் காட்டிய அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் என்பது இந்தியாவுக்கு எப்போதும் எல்லையில் தொல்லை கொடுக்கும் நாடாக இருந்து வருகிறது.  கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வந்தது. காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதிலும் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடியையும், மோடி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீதும் மிகக் கடுமையாக விமர்சித்து முனை வைத்து வருகிறது. இது ஒருபுறமிருக்க மறுபுறம் இம்ரான்கான்  அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ள அவர் மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போதுதான் அவர் இந்தியாவை அவர் வெகுவாக பாராட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், ஏராளமான ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், நவாஸ் ஷெரீப், ஆசிப் அலி சர்தாரி, மௌலானா பார்சல் உர் ரகுமான்  ஆகியோர் திருடர்கள் கொள்ளையர்கள் என்றார். அவர்கள் 25 வருடங்களாக நாட்டை சூறையாடினர், அதை நான் தடுத்து நிறுத்தியதால் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றார்.

இந்தியாவைப் பற்றி இரண்டு முறை குறிப்பிட்டுப் பேசிய இம்ரான்கான்: 

மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் தனக்கு எதிராக சதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.  உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவை கண்டிக்குமாறு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் கடந்தகாலங்களில் எனக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. அதனால்தான் எனது ரஷ்ய பயணமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்க நான் தயாராக இல்லை. எனது கேள்வி மிகவும் எளிமையானது, இந்த நாடுகள் பாகிஸ்தானை அடிமையாக கருதுகின்றனரா.? ஏன் அவர்கள் இந்தியாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை?  இந்தியாவுக்கு இதுபோல உத்தரவு போட அவர்கள் துணியவில்லை என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், வெளியுறவு கொள்ளை விஷயத்தில் மோடி அரசை வெகுவாக பாராட்டுகிறேன், இந்தியா நமத் அண்டை நாடு, தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளான குவாட் அமைப்பில் இந்தியா உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் மூன்று தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது. அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையும் இந்தியா தைரியமாக வாங்குகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இருப்பதே ஆகும். ஆனால் பாகிஸ்தானை மட்டும் அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள் என அவர் கூறினார். இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் மார்ச் 25 அல்லது 28 ஆகிய தேதிகளில் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். 

 

click me!