முதல்வர் வாய்கிழிய மேடைக்கு மேடை விவசாயி சொன்னா மட்டும் போதாது... அவர்களை பாதுகாக்கணும்... அன்புமணி அதிரடி..!

By vinoth kumarFirst Published Jan 25, 2020, 12:14 PM IST
Highlights

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த நாளில் நெடுவாசலில் விவசாயிகள், மாணவர்கள் தொடங்கி போராட்டம் தொடர்ந்து இரண்டு கட்டமாக 197 நாட்கள் நடந்தது. இதனையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தனர். 

தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க எடப்பாடி தயங்குவது ஏன் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த நாளில் நெடுவாசலில் விவசாயிகள், மாணவர்கள் தொடங்கி போராட்டம் தொடர்ந்து இரண்டு கட்டமாக 197 நாட்கள் நடந்தது. இதனையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தனர். 

இந்நிலையில், தான் கடந்த 16-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியும் மக்கள் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நெடுவாசல் உள்ளிட்ட டெல்டா விவசாயிகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மக்களுக்கு எதிரான திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் பாமகவின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்;- தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நீர்மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் ஒரு லட்சம் கோடி நிதி கேட்டு பெற வேண்டும்.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை 5-வது உரிமத்திற்காக விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை பாமக வன்மையாக கண்டிக்கிறது. தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர், காவிரி டெல்டாவை பாதுகாக்க, பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்காது ஏன் என எடப்பாடிக்கு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியாது. பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை ரஜினி தவிர்த்திருக்கலாம் என அன்புமணி கூறியுள்ளார்.

click me!