
மாணவிகளை பெரும் புள்ளிகளுக்கு விருந்தாக்க ப்ரோக்கராக மாறிய நிர்மலா தேவியிடம் இன்று நான்காவது நாளாக நடக்கும் கிருக்குப்பிடி விசாரணையில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் வெளியாகும் என்று தெரியவருகிறது.
கடந்த மார்ச் 14ம் தேதி 4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் இருந்த நிர்மலா தேவியை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகரில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதல்நாள் விசாரணையின் போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மற்றும் துணை பேராசிரியர் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார்.
விசாரணை நடந்து வரும் நிலையில், நிர்மலா தேவி வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய ஆதாரங்களை வைத்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ரகசிய டைரியை ஆராய்ந்ததில் முக்கிய விஐபிக்கள் பெயர் அதில் உள்ளதாம்.இதனையடுத்து அந்த இரண்டு பேராசிரியர்களும் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனிடையே தலைமறைவான ஆராய்ச்சி மாணவரை தேடி அவரது சொந்த ஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் சென்றனர்.
தலைமறைவாக உள்ள காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர், மற்றும் துணை பேராசிரியரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் தலைமறைவான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை இன்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போட வந்த முருகனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்தனர். இதனை ஏற்று விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் முருகன் ஆஜரானார். முருகனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிர்மலாதேவியை சிபிசிஐடி காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சிபிசிஐடி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் வற்புறுத்தல் பற்றி பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர். இதனை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
என கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக நேற்று அருப்புக்கோட்டையின் புறநகர் பகுதியான ஆத்திப்பட்டியில் நிர்மலாதேவி வீட்டிற்கு அழைத்து சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அவர் முன்னிலையில் சோதனை நடத்தினர். அப்போது ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் மற்றும் ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் நிர்மலாதேவியின் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பெயர்கள் டெலிபோன் எண்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற பின்னர் வீட்டினை பூட்டி சீல் வைத்தது. இந்த சோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நிர்மலா தேவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்றும், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலா தேவியை அவரது சகோதரர் ரவி சிபிசிஐடி அலுவலகத்தில் சந்தித்து பேசினார். நிர்மலா தேவியுடன் பயிற்சியில் இருந்த பெண் பேராசிரியையை, கரூரை சேர்ந்த ரயில்வே துறை பணியாளர்கள், நிர்மலா தேவிக்கு தெரிந்த நபர்கள், கணவர் வீட்டு சொந்தக்காரர்கள் என அனைவரையும் வரவழைத்து விசாரித்துள்ளனர்.
ரகசிய டைரியில், காண்டிராக்டர், பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இருந்ததை பார்த்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த முக்கிய புள்ளிகளின் பட்டியலும் சேகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்தவர்களில் மதுரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் கணவரும் சிக்கியுள்ளார். இவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் நிர்மலாதேவியின் டைரியில் உள்ள முக்கிய புள்ளிகளிடமும் விசாரணையை நடத்த சிபிசிஐடி வேகமேடுப்பதால் நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்த பல விஐபிகள் கலக்கத்தில் உள்ளார்களாம்.