எச். ராஜா போட்ட அதிரடி ட்வீட்..! சர்காரே மெர்சலான சுவாரஸ்யம்..!

Published : Nov 07, 2018, 04:16 PM IST
எச். ராஜா போட்ட அதிரடி ட்வீட்..! சர்காரே மெர்சலான சுவாரஸ்யம்..!

சுருக்கம்

படித்ததில் பிடித்தது...."கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என்று, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்து உள்ளார்.  

படித்ததில் பிடித்தது...."கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என்று, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்து உள்ளார்.

தீபாவளியான நேற்று சர்கார் படம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த நேற்றே தமிழ் ராக்கர்ஸ் இந்த படத்தை இணையத்தில் விட்டு விட்டனர். இது ஒரு பக்கம்  இருக்க, சர்கார் படத்தில் இடம் பெற்று உள்ள காட்சிகள் தமிழக அரசியலை வெளுத்து வாங்குவதாக உள்ளது என, பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

இது ஒரு பக்கம் இருக்க சர்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது தான் என இயக்குனர் வருண்  ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். அதாவது அந்த கதை திருட்டுக்கதை  என்பதை ஒத்துக்கொள்ளும் அளவிற்கு, முருகதாஸ் ஒரு கடிதத்தை கூட வருண் ராஜேந்திரனுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், படித்ததில் பிடித்தது...."கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என்று ட்வீட் செய்து உள்ளார்.

இவருடைய இந்த பதிவுக்கு பெரும்பாலோனோர் கடும் விமர்சனத்தை விட்டு உள்ளனர். அதில் குறிப்பாக, ஏற்கனவே மெர்சல் திரைப்படத்திற்கு ப்ரீ ப்ரோமோஷன் செய்தாச்சு..இப்பவாது சும்ம்மா இருங்களேன்.. இல்லையென்றால் சர்கார் படத்திற்கும் ப்ரீ ப்ரோமோஷன் கிடைத்து விடும் என பலரும் விமர்சன கருத்துகளை முன் வைத்து உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!