ஜெயலலிதா வீட்டில் இத்தனை கிலோ தங்கம்- வெள்ளிப்பொருட்களா..? அரசிதழில் வெளியான அதிரடி பட்டியல்..!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2020, 10:34 AM IST
Highlights

 டிவிகள் - 11, பிரிட்ஜ்கள் - 10 ஏசி.,கள் - 38, பர்னிச்சர் பொருட்கள் - 556, துணிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், செருப்புகள் உள்ளிட்டடை - 10,438,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அவர் வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும்- அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளது. 

'வேதா நிலையம்' வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டு அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெயலலிதா வீட்டை தமிழக அரசு மீட்டெடுத்தது. இதுகுறித்த அரசிதழில் வீட்டில் உள்ள அசையும் - அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 32,721 பொருட்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  4 கிலோ 372 கிராம் தங்கம் பொருட்கள் - 14,  601 கிலோ 424 கிராம் வெள்ளிப் பொருட்கள் - 867,  டிவிகள் - 11, பிரிட்ஜ்கள் - 10, ஏசி.,கள் - 38, பர்னிச்சர் பொருட்கள் - 556, துணிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், செருப்புகள் உள்ளிட்டடை - 10,438, தொலைபேசி / மொபைல்போன் - 29, புத்தகங்கள் - 8,376, ஸ்டேசனரி பொருட்கள் - 253, சூட்கேஸ்கள் - 65, கடிகாரங்கள் - 6, ஜெராக்ஸ் மிஷின் - 1, லேசர் பிரிண்டர் - 1 உள்ளிட்ட பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
 

click me!