தினகரன் வெற்றி ரகசியம்...! ஆதரவாளர் சொன்ன ரகசிய தகவலாம்..!

 
Published : Dec 25, 2017, 08:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
தினகரன் வெற்றி ரகசியம்...! ஆதரவாளர் சொன்ன ரகசிய தகவலாம்..!

சுருக்கம்

how dinakaran won the rk nagar election said the secret

ஆர். கே  நகர் இடைதேர்தலில் எப்படித்தான் தினகரன் வெற்றி பெற்றார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் பலரும் பல வித கருத்துக்களை  கூறி வரும் நிலையில்.....தினகரன் ஆதரவாளர்களில் ஒருவர், அவருடைய  நண்பர்  ஒருவரிடம், மக்களின் ஓட்டுக்காக எப்படி செயல்பட்டோம்  என  தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நபர் பதிவிட்ட விவரம் இதோ....

{“நேற்று ராதாக்ருஷ்ண நகர் தேர்தலில் நேரிடையக தினகரனுக்கு பணியாற்றி ஒரு அன்பரிடம் பேசினேன்

எப்படி இந்த தேர்தலில் பணியாற்றியது பற்றி சொன்னார்

மொத்த பூத் 172 ,,,

ஒவ்வொரு பூத்தில் முப்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் வெறும் பத்து பெயரை கூட்டிக்கொண்டு வரவேண்டும் ..

ஒரு பூத்துக்கு 300 பேர் (172 X 300 = 51600 பேர் ) இதில் கூட குறைவாக சுமார் 35,-40,000 பேர்  வேலை பார்த்து இருக்கிறார்கள் .

இவர்களுக்கு தினமும் 300 ரூபாய் (40,000 X 300 x 10 நாள் = 12,00,00,000  பன்னிரண்டு கோடி ரூபாய்

அனைவரும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை வீட்டில் இருக்கும் குக்கரை தூக்கிட்டு வரவேண்டும்.

தேர்தல் பிரசார முடிவு நாளைக்கு முன்பாக ரெண்டு நாள் கடன் சொல்லி இருக்கிறார்கள் !!

கடைசிநாள் அந்த கடன் காசை வாங்க அனைவரும் வந்தாக வேண்டுமே .. வேறு யாரும் காசு குடுத்து கடைசி நாள் இழுத்து விட்டால் !!

கடைசி நாள் அவர்கள் அனைவருக்கும் பணம் முறைப்படி வழங்கப்பட்டு .. ஒரு விசயம் தெளிவாக்கப்பட்டது ..

நாங்க காசு விசயத்தில் சரியாக இருப்போம் என்று...

எல்லா வீட்டிலும் இருபது ரூபாய் குடுத்து போன் நம்பர் வாங்கி அவைகளிடம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றால் ஓட்டுக்கு சுமார் 10,000/- வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது .

தொகுதி முழுதும் ஒரே பேச்சு .. சொன்னபடி இவங்க காசு குடுப்பாரு என்று..

சுமார் 150,000 X10,000 = 150,00,00,000 (நூற்று ஐம்பது கோடி ) கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்

நிறைய ரகசிய ஆட்கள்..அரசியல் வாதியான எனது நண்பர் .. இவனுங்கதான் கட்சியை நடத்தி இருக்காங்க..தேர்தல் செலவு மற்றும் மறைமுக வேலைகள் செய்ய பல ஆட்களை வைத்து இருக்காங்க ..

சுமார் 50,000 ஒட்டு வித்தியாசத்தில் நிச்சயம் வென்றே தீருவோம் என்று நேற்று சொன்னார்

"இன்னிமே இப்படிதான் " ....

எடப்பாடி ... பன்னீர் இவர்கள் வெறும் கோபுர பொம்மைகள் மட்டுமே ..

TTV . தினகரன் புது வித அரசியலை நடத்துகிறார்..”}

இவ்வாறு, பதிவிடப்பட்டு உள்ளது. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை விட, இவை அனைத்தும் பொய்யாக தான் இருக்கும் என்றும் நம்ப முடியவில்லை என மக்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..