பிரதமர் மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம்..? சர்ச்சையை கிளப்பி வரும் காங்கிரஸ் கட்சி..!

T Balamurukan   | Asianet News
Published : Nov 18, 2020, 07:22 AM IST
பிரதமர் மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம்..? சர்ச்சையை கிளப்பி வரும் காங்கிரஸ் கட்சி..!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி எழுப்பியிருக்கிறது.   

பிரதமர் நரேந்திர மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி எழுப்பியிருக்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து 7வது ஆண்டாக இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். பிரதமருடன், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர்.


ராணுவ சீருடையில் பிரதமர் மோடி ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை முகாமில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ சீருடை அணிந்து வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடை அணிந்ததை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இளைஞர் காங்கிரஸ் அணி டிவிட்டரில், 'பிரதமர் மோடி ராணுவ தளபதியோ அல்லது அதிகாரியோ இல்லை. ஒரு சிவிலியன் தலைவர் ராணுவ சீருடை அணிவது எப்படி பொருத்தமானது? என கேள்வி கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!
ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!