பாகிஸ்தானில் இந்துக்களும் சிறுபான்மையினரும் சிறப்பாக இருக்கிறார்கள்... புள்ளி விவரத்துடன் திமுக கூட்டணி எம்.பி

By Thiraviaraj RMFirst Published Sep 9, 2021, 3:15 PM IST
Highlights

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை வெளியேற்றவே இந்த சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்ததாக குற்றம்சாட்டி இருக்கிறார் விசிக எம்.பி., ரவிகுமார்.
 

தமிழக அரசி சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை ஒரு மாநில அரசின் தீர்மானம் கட்டுப்படுத்துமா என்கிற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை வெளியேற்றவே இந்த சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்ததாக குற்றம்சாட்டி இருக்கிறார் விசிக எம்.பி., ரவிகுமார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானில் இருக்கிற சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது எனக்கூறுவதை புள்ளிவிவரத்துடன் மறுக்கிறேன். கிழக்கு பாகிஸ்தானும், மேற்கு பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது. 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 14.2 சதவிகிதம் பேர் சிறுபான்மையினராக இருந்தனர்.  பாகிஸ்தான் பிரிந்த பிறகு கிழக்கு பாகிஸ்தானில் 3.4 சதவிகிதம் பேர்தான் முஸ்லீம் அல்லாதவர்கள்.

இன்றைக்கும் 3.5 சதவிகிதம் பேர் அங்கு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இங்கு உள்ளவர்களின் குடியுரிமை சந்தேகத்திற்கு இடமாக ஆக்கப்படுகிறது.  அங்கிருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல. இங்கிருப்பவர்களை யாரெல்லாம் வேண்டாமென்று நினைக்கிறார்களோ அவர்களை எல்லாம் தவிர்க்க நினைத்து அந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அதனை எதிர்த்தே திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது’’என அவர் தெரிவித்தார். 

click me!