இங்க அதிமுக- திமுகதான்.. பாஜக தலைவர்களை கூண்டோடு மாற்ற வில்லை என்றால்.. தெறிக்கவிட்ட டி.ஆர்

Published : Feb 03, 2022, 03:36 PM ISTUpdated : Feb 03, 2022, 03:44 PM IST
இங்க அதிமுக- திமுகதான்.. பாஜக தலைவர்களை கூண்டோடு மாற்ற வில்லை என்றால்.. தெறிக்கவிட்ட டி.ஆர்

சுருக்கம்

லட்சிய திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அவர், தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுபடுத்திகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகப்போவதாக கூறினார். 

தமிழகத்தில் தற்பொதுள்ள பாஜக தலைவர்கள் தொடர்ந்து இருந்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலாராது என லட்சிய திமுக தலைவர்
டி.ராஜேந்தர் கூறியுள்ளார். சென்னை தி நகரில் உள்ள இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் அண்ணா மறைந்த தினத்தையொட்டி அவர் திருஉருவ படத்திற்க்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜேந்தர் தமிழ் நாட்டில்  எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கபட்ட திமுக மற்றும் அதிமுக தான் தமிழ் நாட்டை ஆளும் என்றார்.

லட்சிய திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அவர், தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுபடுத்திகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகப்போவதாக கூறினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழ தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர், உணவுக்கு குடி தண்ணீருக்கு பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடி ஈழ தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டுமென தமிழ், ஹிந்தி, ஆங்கிலமென, மும்மொழியில் கோரிக்கை வைத்தார்.

மேலும் தற்போது தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலாராது எனவும், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுக என்ற கட்சியியை வியூகம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், அழித்துவிட்டனர் என்றும், ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கைகோர்த்ததால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது இன்னமும் கோபம் குறையவில்லை எனவும், உள்ளாட்சி தேர்தலுகாக கொரோனா போய்விட்டதா என தமிழக அரசிற்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!