ஹிலாரிக்கு ஆறுதல் அளித்த அமெரிக்க உளவுத்துறை

Asianet News Tamil  
Published : Nov 08, 2016, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஹிலாரிக்கு ஆறுதல் அளித்த அமெரிக்க உளவுத்துறை

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின் அஞ்சல்களை ஆய்வு செய்ததில் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும், ஆதாரங்களும் இல்லை என அமெரிக்க உளவுத் துறை(எப்.பி.ஐ.) நேற்று தெரிவித்தது.

அமெரிக்க  தேர்தல் இன்று நடக்க இருக்கும் நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு  பெரிய மன உளைச்சலாக இருந்த இ-மெயில் விவகாரத்தில் இருந்து அவர் விடுபட்டது, தேர்தலில் பெரிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஹிலாரி கிளிண்டன், கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அரசு மின் அஞ்சல்களை தனது தனிப்பட்ட சர்வர்களில் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் விசாரணை நடத்திய அமெரிக்க உளவுத்துறை அமைப்பு(எப்.பி.ஐ.) ஹிலாரிக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரியின் மின்அஞ்சல் விவகாரத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்ப், ரஷியாவுடன் ஹிலாரி பகிர்ந்து கொண்ட மின்அஞ்சல்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், குடியரசுக் கட்சியினரின் கோரிக்கையை எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ்.கோமே நிராகரித்தார்.
மறுஆய்வு

ஆனால், கடந்த மாதம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமே, ஹிலாரியின் தனிப்பட்டமின்அஞ்சல்களை மீண்டும் ஆய்வு செய்ய இருக்கிறோம். அவரின் தனிப்பட்ட உதவியாளர் ஹூமா அபிடென்னுடன் பகிர்ந்து கொண்டமின்அஞ்சல்கள், மற்றும் லேப்டாப்பில் உள்ள 65 ஆயிரம் மின்அஞ்சல்களையும் ஆய்வு செய்ய இருக்கிறோம் எனக் கூறி, அதற்கானவாரண்ட்டையும் பெற்றார்.

கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருந்து வந்த ஹிலாரியின் புகழ் எப்.பி.ஐ. அறிவிப்பால், லேசாக சரியத் தொடங்கியது. இந்நிலையில், அந்த மின்அஞ்சல் விவகாரத்தில் ஹிலாரி மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமேநாடாளுமன்வதுக்கு அனுப்பிய  கடிதத்தில் தெரிவித்துள்ளார். 
கடிதம்
இது குறித்து எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமே எம்.பி.களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ ஹிலாரி கிளிண்டனின் மின் அஞ்சல்களை அமெரிக்க உளவுத்துறை இரவு பகலாகத் தீவிரமாக ஆய்வு செய்தது. ஹிலாரி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு மின் அஞ்சல்களை தனிப்பட்ட சர்வரில் பரிமாறிக்கொண்டது தொடர்பாக அவரின் லேப்டாப்பில் உள்ள 65 ஆயிரம் மின்அஞ்சல்களைஆய்வு செய்தோம்.  இதில் கடந்த ஜூலை மாதம் நாங்கள் தெரிவித்த, எங்கள் கருத்தில் மாற்றமில்லை.

நாங்கள் அதிபர் வேட்பாளர் ஹிலாரிகிளிண்டனுக்கு மதிப்பளிக்கிறோம். அவர் மீது எந்தவிதமான குற்ற நடவடிக்கை எடுக்கவும் முகாந்திரம் இல்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் கடிதத்தை ஹிலாரி கிளிண்டனின் பிரசார அமைப்பு வரவேற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!