பாலியல் தொந்தரவு ரகசியம்... ப.சிதம்பரத்தை குடைந்தெடுக்கும் ஹெ.ராஜா..!

Published : May 06, 2019, 11:16 AM IST
பாலியல் தொந்தரவு ரகசியம்... ப.சிதம்பரத்தை குடைந்தெடுக்கும் ஹெ.ராஜா..!

சுருக்கம்

ஊழலைப் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட வருமானவரித்துறை அதிகாரிக்கு எதிராக பொய் பாலியல் தொந்தரவு புகார் கொடுக்கச் சொன்னது, சொன்னவர் யார் ஆகிய அனைத்து சிதம்பர ரகசியங்களும் உலகறியும். 

ராகுல் காந்தியை திருடன் மகன் என ஒரு முறை சொன்னதை தாங்க முடியவில்லையா? என பாஜக தேசிய செயலாளர் ஹெஜ்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ராஜிவ் ஊழல் செய்தார் என்பதால் தான் மக்கள் 1989ல் ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தார்கள். ஒருவர் இறந்துவிட்டால் ஊழல் இல்லை என்றாகிவிடுவாமா? பிரதமரை ஒருவர் 10 மாதமாக திருடன் என்பார். ஆனால் நீ திருடன் மகன் என்று ஒருமுறை சொன்னால் தாங்கமுடியவில்லையா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.


 
மற்றொரு பதிவில், ‘’ஊழலைப் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட வருமானவரித்துறை அதிகாரிக்கு எதிராக பொய் பாலியல் தொந்தரவு புகார் கொடுக்கச் சொன்னது, சொன்னவர் யார் ஆகிய அனைத்து சிதம்பர ரகசியங்களும் உலகறியும். பண்பாடு, நாகரீகம் பற்றி ப.சி பேசக்கூடாது. 1984ல்  400  தொகுதி 1989 ல் 200 க்கும் கீழ் போனது ஏன்?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!