"விஸ்வரூபம் படத்துக்காக மண்டியிட்டவர் கமல்" - விடாமல் துரத்தும் எச்.ராஜா!

 
Published : Jul 20, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"விஸ்வரூபம் படத்துக்காக மண்டியிட்டவர் கமல்" - விடாமல் துரத்தும் எச்.ராஜா!

சுருக்கம்

h raja abusing kamal hassan

விஸ்வரூபம் படத்துக்காக மண்டியிட்ட கமலை மறக்க கூடாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல், தமிழக அரசியலில் ஊழல் பெருகிவிட்டது என கருத்து தெரிவித்தார். இதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜெயகுமார், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கமல் மீது வழக்கு தொடருவதாகவும், அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு கணக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். இந்த பனிப்போர் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில், கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவில் முதல்வர் ஆவேன் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதில், நடிகர் கமல், முதுகெலும்பு இல்லாத கோழை என தெரிவித்தார். இதைதொடர்ந்து இருதரப்பினரும் செய்தியாளர்கள் சந்திப்பு, டுவிட்டரில் கருத்து பதிவிடுவது என நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு எச்.ராஜா, பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் பதவி என்பது பொறுப்புள்ளவர்களுக்கு வர வேண்டும். கமலுக்கு முதல்வர் பதவி பெற என்ன தகுதி இருக்கிறது. விஸ்வரூபம் படம் வந்தபோது, அவரை நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கினார்கள். அதற்காக மண்டியிட்டவர்தான் கமல் என்பதை யாரும் மறக்க கூடாது.

நான் பச்சை தமிழன் என கூறுபவர், தனது மகளுக்கு ஸ்ருதி என பெயர் வைத்துள்ளார். ஸ்ருதி என்றால் சமஸ்கிருதத்தில் வேதம் என்று பொருள். அதிக பயம் கொண்டவர். இவருக்கு அரசியலில் வர எந்த தகுதியும் இல்லை.

திராவிடர் கட்சியை சேர்ந்தவர்கள் போலவே இவரும், தமிழன் என சொல்லிவிட்டு, பிள்ளைகளை கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்கிறார். திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் போலவே, தமிழை கற்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!