"முதுகெலும்பில்லாத கோழை கமல்" - வசை பாடிய ஹெச்.ராஜா...!!

 
Published : Jul 19, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"முதுகெலும்பில்லாத கோழை கமல்" - வசை பாடிய ஹெச்.ராஜா...!!

சுருக்கம்

h raja abusing kamal hassan

நடிகர் கமலஹாசன் முதுகெலுப்பில்லாத கோழை எனவும், அதனால் அவரால் முதலமைச்சராக முடியாது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தனியார் டிவியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர் சந்தித்து ஒன்றை நடத்தினார்.

அதில் பேசிய கமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனவும் இதை ரஜினி இப்போது சொல்கிறார் தான் எப்போதோ சொல்லிவிட்டேன் என தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் எதிர்கட்சிகள் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதைதொடர்ந்து இரண்டு நாட்கள் அமைதி காத்த கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில், தோற்றால் நான் ஒரு போராளி; முடிவெடுத்தால் நானும் முதல்வர் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவுக்கு மேல் பாஜக ஆட்டம் பெரிதாக உள்ளது.

இன்று காலையில் பேசிய தமிழிசை கமல் ஏன் திடீரென அரசியலுக்கு வரவேண்டும் என பேசினார்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நடிகர் கமலஹாசன் முதுகெலுப்பில்லாத கோழை எனவும், அதனால் அவரால் முதலமைச்சராக முடியாது எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!