"சின்னம்மா தியாகி... கட்சியை காப்பாத்த ஜெயிலுக்கெல்லாம் போனாங்க..." - கண்ணீர் விட்டு கதறும் குண்டு கல்யாணம்...!

Asianet News Tamil  
Published : Jun 28, 2017, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
"சின்னம்மா தியாகி... கட்சியை காப்பாத்த ஜெயிலுக்கெல்லாம் போனாங்க..." - கண்ணீர் விட்டு கதறும் குண்டு கல்யாணம்...!

சுருக்கம்

gundu kalyanam crying for sasikala

சசிகலா சரியான நேரத்தில் முடிவெடுக்காமல் இருந்திருந்தால், கட்சியும் ஆட்சியும் இருந்திருக்காது என்றும் சசிகலா இல்லாவிட்டால் எடப்பாடி முதலமைச்சராக ஆகியிருக்க முடியுமா? அதிமுக பேச்சாளரும் பிரபல நகைச்சுவை நடிகருமான குண்டு கல்யாணம் கூறியுள்ளார்.

அதிமுக பேச்சாளரும், நடிகர் குண்டு கல்யாணம், அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி மோதல் குறித்து தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், அதில், அதிமுகவில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும், இந்த கழகம் யாரால் வளர்ந்தது, காப்பாற்றப்பட்டது என்று. ஒரு சிலர், சசிகலாவை தீண்டத்தகாதவர் போலவும், தினகரனை கட்சியை விட்டு ஒதுங்கிக் கொண்டால் நல்லது என்றும் பேசுகின்றனர். அவர்கள் ஏன் கட்சியை விட்டு ஒதுங்க வேண்டும்? எதற்காக ஒதுங்க வேண்டும் என்றார்.

சசிகலாவை எதிர்ப்பவர்களின் பவுசு எங்களுக்குத் தெரியாதா? அம்மாவின் படத்தை எரித்தவர்கள் தானே நீங்கள்? அதற்கான ஆதாரமும் பதிவும் இருக்கிறது. 

மருததுவமனையிலேயே இருந்து சசிகலா, வீட்டிற்குக்கூட செல்லாமல் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டார். வேறு யாரும் அப்படி பார்த்துக் கொள்ள முடியாது. மறைந்த ஜெயலலிதாவே தாய் ஸ்தானத்தில் இருந்து சசிகலா பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.

பொது செயலாளராக சசிகலா இல்லை என்று கூறுபவர்கள், அன்று நீங்கள்தானே சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பொதுச் செயலாளராக வலியுறுத்தினீர்கள். ஆட்சி யாரால் இருக்கிறது? கட்சி யாரால் உடையாமல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தாரியாதா? மக்களுக்குத் தெரியும் என்றார்.

சசிகலாவால் கட்சிக்கு வந்தவர்கள், இன்று அவரையே அழித்து கட்சியை நடத்த நினைப்பதாக  குட்டிக் கதை ஒன்றை குண்டு கல்யாணம் கூறினார். சசிகலா சரியான நேரத்தில் முடிவெடுக்காமல் இருந்திருந்தால், கட்சியும் ஆட்சியும் இருந்திருக்காது. சசிகலா இல்லாவிட்டால் எடப்பாடி முதலமைச்சராக ஆகியிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்று கூறிய அவர், இந்த கட்சி 100 ஆண்டும், ஆட்சி 4 ஆண்டும் இருக்க வேண்டும் என்றால் அனைவரும் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார். சசிகலா விரைவில் வெளிவந்து அனைத்தையும் சரி செய்து விடுவார் என்றும் நடிகர் குண்டு கல்யாணம் அதில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தவெக வாக்கு மாறியது - த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு! தேர்தல் கலாட்டாஸ் ஒரு பார்வை!
Ajith Support Vijay?!: "வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொல்லவில்லையாம்.! சட்டென பறந்து வந்த விளக்கம்.!