அரசே நடத்தும் கல்விக்கொலை.! மத்திய மாநில அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்.! கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்

Published : Aug 19, 2020, 10:41 PM IST
அரசே நடத்தும் கல்விக்கொலை.! மத்திய மாநில அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்.! கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்

சுருக்கம்

நீட் தேர்வு மத்திய மாநில அரசுகள் இந்த கொரோனா காலத்திலும் நீட் தேர்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் மாணவர்களை துன்பத்தில் துயரத்திற்கு கொண்டு சென்று உள்ளதாக அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் அனிதா மரணம் அதைத் தொடர்ந்து சுபஶ்ரீ வரைக்கும் நீடித்திருக்கிறது.  

கோயம்புத்தூர் ஆர்எஸ்புரம் வெங்கடசாமி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியரான இவரது மகள் சுபஶ்ரீ.19 வயது. நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு முடித்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார் கடந்தாண்டு நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவப் பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக கோவையில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்தார்.

கொரோனா ஊரடங்கினால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.  இதனால் சுபஸ்ரீ மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அதையடுத்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்..

"நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை என்றும் சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். மேலும் இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு என குற்றம் சாட்டியிருக்கிறார்.
 
PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!