லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிப்பணிந்து தரமற்ற கட்டடங்கள்.. திமுக, அதிமுகவை விளாசும் விஜயகாந்த்.!

Published : Dec 28, 2021, 02:33 PM IST
லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிப்பணிந்து தரமற்ற கட்டடங்கள்.. திமுக, அதிமுகவை விளாசும் விஜயகாந்த்.!

சுருக்கம்

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டிடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகின்றன.

லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணியாமல் உரிய நிதியை ஒதுக்கி இனிமேல் கட்டப்படும் சாலைகள், கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள் ஆகியவற்றைத் தரமானதாகக் கட்டி முடித்து, அதனை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என விஜயகாந்த் வலிறுத்தியுள்ளார்.

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம்  நேற்று இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. முன்னெச்சரிக்கையாக அலறியடித்துக்கொண்டு பொதுமக்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அனைத்து உடைமைகயைும் இழந்த பொதுமக்கள் நடுரோட்டில் கண்ணீருடன் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டிடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகின்றன என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னையை அடுத்த திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டிடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகின்றன.

லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிபணிந்து, உரிய நிதியை ஒதுக்காமல், தரமற்ற கட்டிடங்களைக் கட்டுவதாலேயே, சொற்ப காலத்தில் கட்டிடங்கள் இடிந்து விழும் அவலம் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களைக் கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை வேண்டும். இதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணியாமல் உரிய நிதியை ஒதுக்கி இனிமேல் கட்டப்படும் சாலைகள், கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள் ஆகியவற்றைத் தரமானதாகக் கட்டி முடித்து, அதனை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!