கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

By Thiraviaraj RMFirst Published Feb 14, 2020, 10:55 PM IST
Highlights

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி சென்னையில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம்19ம் தேதி துவக்கி வைக்கி வைப்பதாக தமிழ்வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

By: T.Balamurukan

  கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி சென்னையில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம்19ம் தேதி துவக்கி வைக்கி வைப்பதாக தமிழ்வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களை அருங்காட்சியகமாக அமைக்க சுமார்21 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த நிதி ஒதுக்கீடு தமிழர்களுக்கும்,வராற்று ஆய்வாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.4 கட்ட பணி முடிந்த நிலையில், கீழடியில் தமிழர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.இதையடுத்து 5-வது கட்ட அகழாய்வு பணி ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக கீழடியில் தேர்வு செய்யப்பட்ட 110 ஏக்கரில் 10 ஏக்கரில் மட்டும் அகழாய்வு பணி மும்முரமாக நடைபெற்றது.நிதி பற்றாக்குறையால் முழுவதுமாக தோண்ட முடியவில்லை.

இதுவரைக்கும் நடைபெற்ற ஐந்து அகழாய்வுகளில் இருந்து அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 3000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.கீழடி அகழாய்வு பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம், தன்மை குறித்து அறிய அரசு நடவடிக்கை எடுத்தது.சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய காலம் என்று ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசும் போது, "தொல்லியல் துறைக்கு இதுவரை எந்த அரசும் இந்த அளவிற்கு அதிகபடியான நிதியை ஒதுக்கியது கிடையாது. கீழடி அகழாய்வுக்கு 20 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்".என்றார்.

click me!