சசிகலா குறித்து கோகுல இந்திராவின் கருத்து... அமைச்சர் ஜெயக்குமார் பதில்...!

By vinoth kumarFirst Published Jan 13, 2021, 4:18 PM IST
Highlights

 சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பெண்களை இழிவாகப் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னையில் ஆர்பாட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோகுல இந்திரா;- சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் எங்களின் மரியாதைக்குரிய வகையில் போற்றக் கூடிய வகையில் இருப்பவர். அவரையும் அம்மாவையும் இதுபோல பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர் அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். இவரது பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கோகுல இந்திரா பேச்சு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் பெண்களை பற்றி பேசியதற்காகவே  அவர் கருத்து வெளியிட்டு உள்ளதாக கூறினார். பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது. மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ராயபும் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தனது ஆசை என கூறியுள்ளார்.

வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விமர்சிக்கக்கூடாது. தீர்ப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும். வேளாண் சட்டம் குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதில், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது என கூறியுள்ளார்.

click me!