கோவா மாநில முதல்வர் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Published : Mar 21, 2022, 07:39 PM IST
கோவா மாநில முதல்வர் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சுருக்கம்

கோவாவில் நடைபெற்ற முதல்வரை தேர்வு செய்யவதற்கான கூட்டத்தில் கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

கோவாவில் நடைபெற்ற முதல்வரை தேர்வு செய்யவதற்கான கூட்டத்தில் கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதை தொடர்ந்து, கோவா மாநில முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு பிரமோத் சாவந்த் நன்றி தெரிவித்தார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் 19 இடங்களை பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், டேராடூனில் உள்ள விதான் சபாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பன்சிதர் பகத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் நடந்து முடிந்த கோவா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜக 20 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இருப்பினும் சுயேட்சைகளாக வெற்றி பெற்றவர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தயாரானது. இந்த நிலையில் முதல்வரை தேர்வு செய்யவதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு கோவா மாநில முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. மாநில மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?