சிரிக்காம சீரியஸா சொன்ன ஜிகே வாசன்... இராமாயண மேட்டரில் ரணகளப்படுத்திய ராஜேந்திர பாலாஜி!

By Vishnu Priya  |  First Published Mar 11, 2019, 5:00 PM IST

எடப்பாடி பழனிசாமி வாயசைத்தால் வரலாறு, நாவசைத்தால் புறநானூறு! இதுதான் விதி. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி எடப்பாடி. அவர் சொன்னா சொன்னதுதான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.


* ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட, கேட்காமல் அவர் கொடுப்பதும், பெறுவதும் பெரிய விஷயம். நான் அவரை நம்புகிறேன்: கமல்ஹாசன். (பாஸு, இதுக்கு நீங்க நேரடியாவே அவர்கிட்ட ‘நண்பா, எனக்கு ஆதரவு கொடு’ன்னு கேட்டிருக்கலாம். மாவும் அரையணும், ஆனா அரிசியும் நசுங்க கூடாது!ங்கிற டைப்புல நீங்க அப்படியும், இப்படியுமா ஜல்ஜாப்பு பண்றது சினிமாவுக்கு ஒத்து வரும், ஆனா அரசியலுக்கு. இதுல இன்னொரு ஹைலைட்டு என்னான்னா, ரசிகனுங்களுக்கே ரவா அல்வா கிண்டி கொடுக்குற மனுஷன் எதிர்கால போட்டியளரான உங்களுக்கு மட்டும் பால்பாயசம் கொடுத்துடுவாரா என்ன?)

* அ.தி.மு.க.வில், உட்கட்சி பூசல் என்பது எப்போதும் இல்லை. தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கிறோம்: பொள்ளாச்சி ஜெயராமன். (ஓ.கே. தல அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைச் சொல்ற நீங்க, சில மாசங்களுக்கு முன்னாடி...’அமைச்சர்களுக்கு நாவட்டக்கம் தேவை. ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. தலைவர், அம்மா என இரண்டு ஆளுமைகளின் கட்டுப்பாட்டில் நின்று அரசியல் புரிந்த சீனியர்களுக்கு தலைமை உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.’ அப்படின்னு பேட்டி கொடுத்தது மறந்து போச்சோ?)

Tap to resize

Latest Videos

* எடப்பாடி பழனிசாமி வாயசைத்தால் வரலாறு, நாவசைத்தால் புறநானூறு! இதுதான் விதி. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி எடப்பாடி. அவர் சொன்னா சொன்னதுதான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (அப்டீயா தல? அப்ப ராமாயணத்த எழுதுன சேக்கிழாரும் நம்ம எடப்பாடியார்தானா? ஆக்சுவலா நீங்க எப்பவுமே எப்படியா, இல்ல இப்படித்தான் எப்பவுமேவா!?)

* எங்களின் இயக்கப் பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் வேண்டுமென நினைக்கிறோம். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து எங்களின் முடிவை தெரிவித்துள்ளோம்: ஜி.கே.வாசன். (ஆனா ஒண்ணுஜி, சிரிக்காம சீரியஸா மூஞ்சிய வெச்சுகிணு எதிர்ல இருக்குறவன் தெறிச்சு சிரிக்கிற அளவுக்கு ஜோக்கடிக்க உங்களாலே மட்டும்தான் முடியுது. இந்த விஷயத்துல மட்டும் உங்கள ஒரு பயலாலும் அடிச்சுக்க முடியாது. ஞான தேசிகன் கதறிக் கண்ணீர்விட்டு காங்கிரஸை நோக்கி ‘எங்களை சேத்துக்குங்க ராகுல் ஜி’ன்னு கூப்பாடு போட்டதை கேட்ட பிறகும் இப்படி டயலாக் விடுறதுக்கும் ஒரு தகிரியம் வேணும்.)

* அரசியலுக்கு வராமல் ரஜினி காலம் கடத்தி வருவதால் அவருக்கும் தே.மு.தி.க.வின் நிலை ஏற்படும்: நடிகை கஸ்தூரி. (பிரேமலதா மிஸ் இந்தப் புள்ளைய பாருங்க, நம்ம கேப்டன பத்தி தப்புத்தப்பா பேசுது. கொஞ்சம் என்னா?ண்ணு உங்க ஸ்டைல்ல கேளுங்க மிஸ்.)

click me!