100 கோடி லோன்... 3 கோடி கட்டிங் போட்ட, அஜால் குஜால் ஆசாமி கைது...!! அமாஞ்சாமி தொழிலதிபருக்கு நாமம் போட்ட டுபாக்கூர்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2019, 7:01 PM IST
Highlights

போயஸ் தோட்டத்தில் உள்ள ஆடம்பரமான அலுவலகத்தை பார்த்ததும், தான் கேட்கும் 100 கோடி கடனை முத்துவேல் பெற்று தருவார் என நம்பினார்  தொழிலதிபர் நிகில் கண்ணா. அவரிடத்தில் சில போலி ஆவணங்களை  காண்பித்து வங்கி கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறி, அதற்கான கமிஷன் தொகையாக 2.62 கோடியை பெற்றுக் கொண்டார்  முத்து வேல் 
 

சென்னையில் 100 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக ராஜஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபரை ஏமாற்றி பணம் பறித்த அரசியல் கட்சி பிரமுகர் முத்துவேல் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் பகுதியை சேர்ந்த முத்துவேல் (45), லயன் முத்துவேல் என தனக்கு தானே பெயர் சூட்டிக் கொண்ட இவர் தற்போது மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். அரசியல் கட்சி ஒன்றில் வழக்கறிஞர் பிரிவு பகுதி துணை அமைப்பாளராக இருந்து வருவதாகவும். லயன் முத்துவேலின் புகைப்படம் அடிக்கடி  பத்திரிகைகளில் நண்பர்கள் பெயரில் மெகா சைஸ் விளம்பர வாழ்த்து செய்தியாக வெளிவருவது வழக்கம், வில்லிவாக்கம், ராஜமங்கலம், கொளத்தூர், பகுதியில் கோயில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் என்றால் முத்துவேலின் பெயரில் வெயிட்டான தொகை வந்து சேர்ந்துவிடும்.  மெட்ராஸ் படத்தில் வருவதுபோல சுவரில் கட்சி விளம்பரம் செய்யவும் இவரை தான் பார்க்க வேண்டுமாம்,

 போயஸ் கார்டனில் அலுவலகம் வைத்து கட்டப் பஞ்சாயத்து மூலம் கோடி கணக்கில் வசூலில் ஈடுபட்டு வந்தார் என்றும் அடுக்கடுக்கான பல புகாரில் தெரிவிக்கின்றனர்.போயஸ் கார்டனில் உள்ள பாபா எண்டர்பிரைசஸ், முத்துவேல் எண்டர்பிரைசஸ், வாராகி எண்டர்பிரைசஸ் என பல பெயர்களில் போலியாக நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்ததாகவும் இவரது ஆதரவாளர்களான அஜ்மல் மற்றும் வாசு என்கிற இரண்டு தரகர்கள் இவருக்கு வலது, இடதுமாக செயல்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இவரிடம் இருந்த ஐந்து சொகுசு கார்கள் மற்றும் தங்க நகைகள் உட்பட வங்கி கணக்கு ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.கோடிக்கணக்கில் பணத்தேவை உள்ளவர்களை அணுகி அவர்களுக்கு எந்த விதத்திலும் சிக்கல் இல்லாமலும் ஆவணங்கள் இல்லாமலும் பல கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கித் தருவதாக கூறி முத்துவேலுவிடம் அழைத்து சென்று அவர்களிடம் கமிஷன் வாங்கிக் கொள்வது இவர்களது வழக்கம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 ராஜஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் நிகில் கண்ணா என்பவர், சென்னையில் தொழிலை தொடங்குவதற்கு வங்கி கடன் பெற முயன்று வரும் தகவல் அறிந்து அவருக்கு உதவுவதாக முத்துவேல் அணுகியுள்ளார். முத்துவேலுவின் போயஸ் தோட்டத்தில் உள்ள ஆடம்பரமான அலுவலகத்தை பார்த்ததும், தான் கேட்கும் 100 கோடி கடனை முத்துவேல் பெற்று தருவார் என நம்பினார்  தொழிலதிபர் நிகில் கண்ணா. அவரிடத்தில் சில  போலி ஆவணங்களை  காண்பித்து வங்கி கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறி, அதற்கான கமிஷன் தொகையாக 2.62 கோடியை பெற்றுக் கொண்டார்  முத்து வேல் ஆனால் சொன்னபடி கடன் கிடைக்காததால்  கமிஷன் தொகையை திருப்பிக் கேட்டபோது தொழிலதிபர் நிகில் கண்ணாவை தனது அடியாட்கள் மூலம் மிரட்ட தொடங்கினார் முத்துவேல், இதனால்  அதிர்ச்சியடைந்த நிகில் கண்ணா நடந்தவை குறித்து  மத்திய குற்றப்பிரிவில்  புகார் அளித்தார். அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து முத்துவேலை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் ஆந்திர மாநிலத்தில் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இவருக்கு உடந்தையாக இருந்து புரோக்கர்களாக செயல்பட்ட அம்ஜத், வாசு இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

click me!