ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. 4 அரசு மருத்துவர்கள் அதிரடி சஸ்பெண்ட்.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Dec 15, 2022, 1:04 PM IST
Highlights

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வப்போது அரசு மருத்துவமனைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டு வருகிறார். நோயாளிகளை காக்க வைத்து பணிக்கு தாமதமாக வரும் அரசு மருத்துவர்கள் மற்றும் முன்அறிவிப்பு இல்லாமல் விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழக சுகாதாரத்துறை அவ்வப்போது அரசு மருத்துவமனைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டு வருகிறார். நோயாளிகளை காக்க வைத்து பணிக்கு தாமதமாக வரும் அரசு மருத்துவர்கள் மற்றும் முன்அறிவிப்பு இல்லாமல் விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க;- இப்போ லிப்டில் போனால் கூட பாதுகாப்பு இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சீண்டும் தமிழிசை..!

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது எவ்வித முன்அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்கள் மற்றும் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

மேலும், இதை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை வேறு மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க;-  பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை.. உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. அமைச்சர் மா.சு

click me!