ஆறு மாத சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தார் முன்னாள் நீதிபதி கர்ணன்

 
Published : Dec 20, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஆறு மாத சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தார் முன்னாள் நீதிபதி கர்ணன்

சுருக்கம்

former justice c s karnan released from kolkatta prison

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், ஆறு மாத சிறைவாசம் முடிந்து புதன் கிழமை இன்று காலை விடுதலை ஆகி வெளியில் வந்தார்.  

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தால், அவதூறு வழக்கை  எதிர்கொண்டார் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன். இதையடுத்து, நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் முகாமிட்டு தேடிய கொல்கத்தா போலீசார், கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி கோயம்புத்தூரில் வைத்து அவரை கைது செய்தனர். 

அதன் பின்னர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட கர்ணன், ஆறு மாத சிறை தண்டனை அனுபவித்தார். இந்நிலையில், அவரது சிறைத் தண்டனை காலம் முடிவடைந்த நிலையில்,  புதன்கிழமை இன்று, அவர் கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையானார். 

பின்னாளில் தாம் சுயசரிதை நூல் எழுதப் போவதாக அவர் கூறியுள்ளார். சிறையில் அனுபவத்த விஷயங்களைக் குறித்தும் அவர் புத்தகம் எழுதக் கூடும் என்று தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!