
ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த புகாரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் கைதாகியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர் சுப்பையா சண்முகம். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்து வந்தார். (கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒழிங்கு நடவடிக்கை காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 210வது பிளாட்டில் வசித்து வருபவர் சந்திரா சம்பத், அதே குடியிருப்பில் 110வது பிளாட்டில்தான் சுப்பையா சண்முகம் வசித்து வருகிறார். இருவருக்குமிடையே கார் பார்க்கிங் விவகாரத்தில் பிரச்சனை இருந்து வந்தது. தனக்குள்ள அரசியல் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி சுப்பையா அந்தப் பெண்மணிக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் தினமும் தனது வீட்டு வாசல் ஈரமாக இருப்பதாக மூதாட்டி சந்திரா சம்பத் உணர்ந்தார். அவரின் வீட்டு வாசலில் குப்பைகளும் கிடந்துள்ளது. இதையடுத்து வாசலை கண்காணிக்க சிசிடிவி கேமராவை பொறுத்தினார் சந்திரா சம்பத், அப்போது ஒரு நபர் சிறுநீர் கழிப்பது அதல் பதிவானது. அதை ஆராய்ந்ததில் அது வேறுயாரும் இல்லை, ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்த சுப்பையா சண்முகம் தான் என்பது தெரியவந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அது தொடர்பாக பலமுறை சுப்பையா சண்முகத்தை ஆதம்பாக்கம் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர், ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
மேலும் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சிறுநார் கழித்த அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பலரும் அவரை வறுத்து எடுத்து வந்தனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மூதாட்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த வழக்கில் ஆதம்பாக்கம் போலீசார் இன்று காலை டாக்டர் சுப்பையாவை அழைத்து விசாரணை நடந்தி வந்தனர். அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுப்பையா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தவர் ஆவார். புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில்தான் மூதாட்டி வீட்டி வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் சுப்பையா சண்முகத்திடம் விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.