முதலில் அமைச்சர், பிறகு முதலமைச்சர்...!! தன் அரசியல் இலக்கை அதிரடியாக அறிவித்த தமிழிசை...!!!

Published : Sep 01, 2019, 07:33 PM IST
முதலில் அமைச்சர், பிறகு முதலமைச்சர்...!!  தன் அரசியல் இலக்கை அதிரடியாக அறிவித்த தமிழிசை...!!!

சுருக்கம்

அரசியலில் தன் தந்தை மிக ஒழுக்கமும் கடின உழைப்பும் உள்ளவராக இருந்தாலும் அதற்கு ஏற்ற உயரத்தை அவர் அடையமுடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு உள்ளது என்று கூறினார். அவர் எட்டாத உயரத்தை அவரின் மகளான தான் எட்ட வேண்டும் என்பதே தன் லட்சியம் என்றார். 

அமைச்சர் ஆகவேண்டும் என்பது தனது விருப்பம் என்றும்,  முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே  இலக்கு என்றும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கான மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே ஆளுனர் பதவி கிடைத்துள்ளது என்றார், எதிர்பாராத நிலையில் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.  உழைத்தால் பாஜகவில் உயர முடியும் என்பதற்கு ஆதாரமாகவே பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனக்கு ஆளுனர் பதவி கொடுத்துள்ளனர் என்றார், எனவே பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நன்றி என அவர் கூறினார். இதுநாள்வரை தனக்கு உதவியாக இருந்து வந்த தமிழக பாஜக தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இன்னும் சில தினங்களில் ஆளுனராக பொறுப்பேற்க உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மற்றும் அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார் தமிழிசை.  இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், 

சிறு வயது முதலே தன் தந்தையைப்போல் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்ததாக கூறினார், அரசியலில் தன் தந்தை மிக ஒழுக்கமும் கடின உழைப்பும் உள்ளவராக இருந்தாலும் அதற்கு ஏற்ற உயரத்தை அவர் அடையமுடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு உள்ளது என்று கூறினார். அவர் எட்டாத உயரத்தை அவரின் மகளான தான் எட்ட வேண்டும் என்பதே தன் லட்சியம் என்றார். இதனிடையே தமிழக பாஜக தலைவர், மற்றும் மாநிலத்தின் ஆளுனர் என்ற பதவிகள்  உயர்ந்துள்ள தங்களின் அரசியில் இலக்கு என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  முதலில் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்பதே தன்  விருப்பம் என்றும் , பிறகு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது அரசியலில் தனக்குள்ள இலக்கு என்றும் தமிழிசை கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை