நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு.!!

Published : Jun 23, 2020, 08:39 PM IST
நாளை தமிழகம்  முழுவதும் கடையடைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு.!!

சுருக்கம்

கிளை சிறைச்சாலையில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் தலைவர் அறிவித்துள்ளார்.


கிளை சிறைச்சாலையில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் தலைவர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் .சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் . கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்லானர். வழக்கு பதிவோடு இல்லாமல் அவர்களை இருவரையும்  கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.


 
இந்த நிலையில் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிங்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் தந்தை ஜெயராஜ் இன்று காலை உயிரிழந்தார். தமிழகத்தில் லாக்அப் மரணம் அடுத்தடுத்து நடைபெற்று வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும் போது... "சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி.யிடம் திமுக எம்.பி கனிமொழி புகார் அளித்துள்ளார்.மேலும் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.


 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு