இரண்டு நாளா லாரி ஸ்ட்ரைக்… விவசாயிகளிடம் தேங்கிய விளை பொருட்கள் !! உதவி செய்த அரசு !!

First Published Jul 21, 2018, 11:15 PM IST
Highlights
farmers will take theri agri good in Govt Buses because of lorry strike


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் , விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமான எடுத்துச் செல்லாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி  நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. இதனால் பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துக் கெல்வதில் பெரும் சிரமர் ஏற்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அத்தியாவசிப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக காய்கறி விலைகள் உயர்ந்துள்ளன.

இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறு விவசாயிகள்தான். தங்களது தோட்டத்தில் விளைந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தமிழக அரசு  உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. அதன்படி லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு  அரசுப் பேருந்துகளில் , விவசாயிகள் தங்கள் விளை  பொருட்களை இலவசமாக கொண்டு செல்லாம்  என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் அரசு பஸ்களி்ல் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் விளை பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் தமிழக அரசு உத்தரவை அனுப்பியுள்ளது.

இதையடுத்து தங்களது விளை பொருட்களை எப்படி சந்தைக்கு கொண்டு செல்வது என தவித்துக் கொண்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!