சென்னையில் மட்டும் 13 ஆயிரம் போலி ’காலி’...! பூரிக்கும் மாநகராட்சி..!

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 06:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
சென்னையில் மட்டும் 13 ஆயிரம் போலி ’காலி’...! பூரிக்கும் மாநகராட்சி..!

சுருக்கம்

fake voters is cancelled in chennai

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.  

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதைதொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. 

சசிகலா தரப்பில் ஒரு அணியும் ஒபிஎஸ் தரப்பில் ஒரு அணியும் உருவாகியது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சசிகலா தரப்பில் அவரது பேச்சையும் மீறி துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கினார். 

ஒபிஎஸ் தரப்பில் ஆர்.கே.நகர் தொகுதி மண்ணின் மைந்தனான மதுசூதனன் வேட்பாளராக களமிறங்கினார். 

இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா கொடுக்கப்படுவதாக ஒபிஎஸ் தரப்பும் எதிர்கட்சியினரும் டிடிவி தரப்பினர் மீது குற்றம் சாட்டின. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து போலி வாக்களை நீக்கம் செய்ய வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். மேலும் திமுகவினர் வழக்கே போட்டுள்ளனர். 

இந்நிலையில், போலி வாக்காளர்கள் நீக்குவது குறித்து சென்னை மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் அனிஸ்மிஸ்ரா சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?