தினகரன் மீது பொய் குற்றச்சாட்டு - பொங்கி எழும் புகழேந்தி

 
Published : Apr 26, 2017, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
தினகரன் மீது பொய் குற்றச்சாட்டு - பொங்கி எழும் புகழேந்தி

சுருக்கம்

fake case on dinakaran by pugazhenthi

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு கடந்த 4 மாதமாக இரு அணிகளும் பயங்கரமாக மோதி கொண்டு இருந்தன. இந்த வேளையில் ஆர்கே நகர் இடை தேர்தல் கடந்த 12ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், இரு அணிகளும் களம் இறங்கின. இருவருமே இரட்டை இலை சின்னத்தை வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். இதனால், தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. அதற்கு பதிலாக தனித்தனி சின்னங்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.150 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் டிடிவி.தினகரனை கைது செய்தனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில அதிமுக ஜெயலலிதா அணி செயலாளர் புகழேந்தி கூறியதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டி.டி.வி.தினகரன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என்பதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!