
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் என்னையை குறி வைத்து, பேசி கலாய்க்கிறார்கள் என மதிமுக பொது செயலாளர் வைகோ, வேதனையுடன் மனம் விட்டு குமுறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் என்னுடைய செல்போன் நம்பரை யாரோ போட்டு வைத்துள்ளனர். என்னை பற்றி மோசமாக சித்தரித்து படத்தை போடுகின்றனர். இழிவாக பேசுகின்றனர்.
அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை போடவேண்டும். திமுக உண்ணாவிரதம் இருப்பது ஜனநாயக உரிமை. தமிழக அரசு 500 மதுகடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. என்னுடைய நிலைப்பாடு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது மட்டுமே.
அனைத்து டாஸ்மாக் கடைகளையும் தமிழக அரசு உடனடியாக மூடவேண்டும். இதற்காக நாங்கள் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.