கேட்டதையே கேட்கும் செய்தியாளர்கள்...! சொன்னதையே சொல்லும் ஜெயக்குமார்..!

Asianet News Tamil  
Published : Mar 27, 2018, 10:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
கேட்டதையே கேட்கும் செய்தியாளர்கள்...! சொன்னதையே சொல்லும் ஜெயக்குமார்..!

சுருக்கம்

eyakumar say what he said

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் வரை தமிழக அரசு ஓயாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்  நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் காவிரி மேலாண்மை குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் வரை தமிழக அரசு ஓயாது என தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தும் என் நம்புவதாகவும், மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி வாரியம் அமைக்காவிடில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்  எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!