திமுகவிலிருந்து முல்லைவேந்தன் நீக்கம்... அன்புமணியை சந்தித்ததால் நடவடிக்கை!

By Asianet TamilFirst Published Apr 16, 2019, 8:40 AM IST
Highlights

கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் அழைப்பின் பேரில் திமுகவில் மீண்டும் இணைந்தார். முல்லை வேந்தன் கோவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், கட்சிப் பணிகளில் எதிலும் ஈடுபடாமல் முல்லைவேந்தன் அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நடைபெற்றது.
 

தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியுடனான சந்திப்பைத் தொடர்ந்து திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நீக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் செந்தில்குமார், அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மும்முனை போட்டி காரணமாக தருமபுரி தொகுதியில் அனல் பிரசாரம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனைச் சந்தித்து திடீரென ஆதரவு கோரினார்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முல்லை வேந்தன், பின்னர் தேமுதிகவில் இணைந்தார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் அழைப்பின் பேரில் திமுகவில் மீண்டும் இணைந்தார். முல்லை வேந்தன் கோவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், கட்சிப் பணிகளில் எதிலும் ஈடுபடாமல் முல்லைவேந்தன் அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நடைபெற்றது.


இதுதொடர்பான செய்திய வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

click me!