முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..

Published : Sep 27, 2020, 09:34 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..

சுருக்கம்

பாஜக மூத்த  தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 82 வயதான ஜஸ்வந்த் சிங் இன்று காலமானார். மறைந்த ஜஸ்வந்த் சிங், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாஜ் அமைச்சரவையில் முக்கிய  துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடளுமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய ஜஸ்வந்த் சிங், பாஜக  உருவாக்கத்தில் வாஜ்யாப், அத்வானி ஆகியோரோடு இணைந்து பெரும் பங்காற்றியவர்.


ஜஸ்வந்த சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜஸ்வந்த் சிங் தேசத்துக்காக முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் அரசியலிலும் பணியாற்றியவர். வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி, வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சரவையில் பங்கு வகித்து முத்திரைப் பதித்தவர். அவருடைய மரணம் வருத்தம் தருகிறது. அவருடைய பங்களிப்புக்காக ஜஸ்வந்த் சிங் நினைவுக்கூரப்படுவார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!