
பரபரப்புக்கு புகழ் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரபரப்பு செய்தி வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.
ஒருபுறம் ஆளும் கட்சி அறிக்கை , மற்றொரு புறம் எதிர் கட்சிகளின் தாறுமாறு கேள்வி, மற்றொரு புறம் ஆளுங்கட்சியில் உட்கட்சி பூசல் என அனைத்தும் ஒருசேர நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.அவருடைய அறிவிப்பு உட்கட்சி பூசலின் நிலைப்பாட்டை மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது .
அதாவது, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, நாளை சசிகலாவிற்கு பிறந்த நாள் இருக்கும் தருணத்தில், ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி இன்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது