மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கட்டுரை போட்டி..!! கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள சுற்றறிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2020, 4:42 PM IST
Highlights

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்திற்கான மையக்கருத்து "விழிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா"  என மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தலைப்பு அறிவித்துள்ளது. 

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் "லஞ்சம் கொடுக்க வேண்டாம்" , " லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்"  என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரம்  கடைபிடிக்கப்பட உள்ளது. இந்தாண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்திற்கான மையக்கருத்து "விழிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா"  என மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தலைப்பு அறிவித்துள்ளது. 

அதாவது  நாட்டில்  லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க விழிப்புடன் இருக்க வேண்டும், என்றும் அதன்மூலம் துடிப்பான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற மையக்கருத்து கொண்டு இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் சுவரெட்டி போட்டி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு " விழிப்பான இந்தியா"  "செழிப்பான இந்தியா"  என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி தாயாரிக்கும் போட்டிகளை நடத்த மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையம்,  மாநில கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அதில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் "துடிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா" என்ற தலைப்பில்  கட்டுரை மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டிகளை வரைந்தனுப்பலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இணையதள வழி மூலமாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ கட்டுரைகள்- விழிப்புணர்வு சுவரொட்டிகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரையானது 750  வார்த்தைகளில் அமைந்திருத்தல் வேண்டும், 

எழுதும் கட்டுரைகள் PDF வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,  dvacvaw@gmail.com என்ற முகவரிக்கு கட்டுரை- விழிப்புணர்வு சுவரொட்டி அனுப்ப வேண்டும். (ஏதாவது ஒன்று) அனுப்பும் மாணவரின் பெயர் மற்றும் அவரின் இணைய முகவரி, தொடர்பு எண் அவர் சார்ந்துள்ள கல்லூரியின் பெயர் மற்றும் முகவரி அக்கல்லூரியின் இமெயில் ஐடி போன்றவை தெளிவாக இருத்தல் வேண்டும். 

அதேபோல் இணைய வசதி இல்லாதவர்கள் சீலிடப்பட்ட உறையில் (hard copy)-தாளில் எழுதப்பட்ட கட்டுரைகளையும்  அனுப்பலாம்

Vigilance awareness cell 
Directorate of vigilance and anti-corruption
Number-293 m.k.n.Road alandur Chennai -16

என்ற முகவரிக்கு கட்டுரையாளர், விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியாளரின் பெயர், முகவரி மற்றும் இமெயில் ஐடி, தொடர்பு எண் மற்றும் அவர் சார்ந்துள்ள கல்லூரியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் 30-10-2020 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.அனுப்பும் கட்டுரை மற்றும்  விழிப்புணர்வு சுவரொட்டி  முழுக்க முழுக்க அந்த மாணவரால் சொந்தமான (வரையப்பட்டதாக) எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.  சீலிடப்பட்ட உறையில் கட்டுரையையும் அந்த உறையில் மீது கட்டுரையின் தலைப்பினையும் எழுதி அனுப்ப வேண்டும். 

முழுக்க முழுக்க சொந்த கருத்தால் அந்த கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். (தகவல் திருட்டு இருப்பில் தகுதி நீக்கம் செய்யப்படும்) 

எழுத்தின் வடிவம் Arial-14 என்ற அளவில் இருக்க வேண்டும்,

ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி 1.5 சென்டி  மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும், 

மார்ஜின் அளவு 2.54 சென்டிமீட்டர் (நான்கு புறமும்) இருக்க வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பெறும் கட்டுரை,  விழிப்புணர்வு சுவரொட்டிகளுக்கு  பரிசுகள் வழங்கப்படும். 

போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அவர்களின் கரங்களால் சான்றிதழ் வழங்கப்படும்.

முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களின்  பெயர் விவரம் லஞ்ச ஒழிப்புத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.

வெற்றிபெற்ற போட்டியாளர்கள் பரிசு பெறும்போது அவர்களின் கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம்.

போட்டியாளர்கள் தங்களது கட்டுரைகள்-  அல்லது விழிப்புணர்வு சுவரொட்டிகளை அக்டோபர் -30 தேதி மாலை 4 மணிக்குள் வந்து சேறும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!