பெண்ணினம் தலை நிமிர்ந்ததுக்கு நாங்கள் தான் காரணம்... கெத்து காட்டும் மு.க.ஸ்டாலின்..!

Published : Aug 11, 2020, 05:28 PM IST
பெண்ணினம் தலை நிமிர்ந்ததுக்கு நாங்கள் தான் காரணம்... கெத்து காட்டும் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்: திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன்!

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே 1989-ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கருணாநிதி உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன். சமூகம் - பொருளாதாரம் - குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!