முதலமைச்சர் வேட்பாளராக சாதித்து காட்டினார் இபிஎஸ் ..!! வழிகாட்டு குழு அமைத்து சாதித்து காட்டினார் ஓபிஎஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2020, 10:31 AM IST
Highlights

ஓபிஎஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதலில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.  அதே போல்  அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை ஈ.பி.எஸ் அறிவித்தார்.

அதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பிரபாகரன், மோகன், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், கீ.மாணிக்கம் ஆகிய 11 பேர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது, சட்டமன்ற தேர்தலேயும் தாண்டி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருந்து வந்தது இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில்,  தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக காரசாரமாக விவாதிக்கப்பட்டது, அதில் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே அப்போது காரசார வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து (இன்று) மே-7 ஆம் தேதி அன்று முறைப்படி அறிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி அறிவித்தார். நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கட்சியின் பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. அதேபோன்று ஓபிஎஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதலில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

மேலும் இரு தலைமைகளை கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளராக  தான் மட்டுமே தொடர வேண்டுமென ஓபிஎஸ் சொல்லி விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்  கொடுக்க தயார் ஆனால் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை கண்டிப்பாக அமைக்க வேண்டும்  என்பதில் ஓபிஎஸ் திட்டவட்டமாக இருந்து வந்துள்ளார். அதிமுகவில் 11 பேர் கொண்ட குழு அமைக்க இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அதன் படி அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை ஈ.பி.எஸ் அறிவித்தார். 

அதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பிரபாகரன், மோகன், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், கீ.மாணிக்கம் ஆகிய 11 பேர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.  

 

click me!