முடிவுகளை நிறுத்தி வைக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடும் முதல்வரின் மைத்துனர்... மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு..!

By vinoth kumarFirst Published Jan 2, 2020, 3:05 PM IST
Highlights

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கின்றனர் என சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். 

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கின்றனர் என சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30-ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 315 மையங்கள் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊரில் முடிவுகள் அறிக்கப்படாமல் நிறத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், துணை முதல்வர் போடி பகுதியில் இதுவரை வெற்றி நிலவரங்களை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். அதில், தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக புகார் கூறியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்;- நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதை எப்படியாவது தடுத்து நிறுத்துகின்ற முயற்சியில் ஆளுங்கட்சியான அதிமுக அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு சதி செய்து வருகின்றனர். 

அதில் குறிப்பாக முதல்வர் எடப்பாடியின் தொகுதியான எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். சேலம் கொளத்தூரில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அதை அறிவிக்காமல் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தபடி அதிகாரிகளுக்கு முதல்வரின் மைத்துனர் உத்தரவிடுகிறார் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

துணை முதல்வர் போடி பகுதியில் இதுவரை வெற்றி நிலவரங்களை அறிவிக்கவில்லை. அதேபோல், விளாத்திக்குளத்தில் 3 வாக்குப்பெட்டிகளை காணவில்லை என்ற செய்திகள் வருகின்றன. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் நானே நேரடியாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததுள்ளார்.

click me!